Interactive Courses
Learn to read and write Sanskrit in 5 months
Course Validity
Course Fee
Students Enrolled
நான்மறைகள், புராணங்கள், இதிஹாஸங்கள் போன்ற பொக்கிஷங்கள் நிறைந்த ஸம்ஸ்க்ருத மொழியை எளிமையாக இணையதளம் மூலம் பயில நல்லதொரு வாய்ப்பைச் சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரி, "நமது ஸம்ஸ்க்ருதம்" என்ற பாடத்திட்டம் மூலமாக ஏற்ப்படுத்துகிறது. இந்த வகுப்புகள் வாரத்திற்கு இருமுறை வீதம் சுமார் ஐந்து மாதங்களில் நிறைவடையும். மாணவர்கள் எளிமையான ஸம்ஸ்க்ருதத்தில் உரையாடவும், எழுதிப்படிக்கவும், எளிமையான ஸம்ஸ்க்ருதத்தைப்புரிந்து கொள்ளவும் எவ்வண்ணம் இயலுவார்களோ அவ்வண்ணம் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளோம். R.S. வாத்யார் & சன்ஸ் ப்ரசுரித்த "பாலாதர்ஶ:" என்ற புத்தகமானது இந்த வகுப்புகளின் பாடப்புத்தகமாகும். எழுத்துக்களிலிருந்து துவங்குவதால், இவ்வகுப்புகளில் சேர்ந்து பயிற்ச்சிபெற ஸம்ஸ்க்ருதத்தில் எந்த முன்-ஞானமும் தேவையில்லை.
நமது ஸம்ஸ்க்ருதம் இணயவழிப்பாடங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
இணையவழிப்பாடங்களை மெற்கொள்வதற்குத் தமிழ் மொழியும், கணினி பயன்படுத்துதலும் தெரிந்திருந்தாலே போதும் மற்றெந்த தகுதியும் வேண்டாம்.
நமது ஸம்ஸ்க்ருதம் பாடங்களை இணையதளம் மூலம் கற்க ஓர் குறிப்ட்ட நேரத்தில் கணிணியின் முன் அமர வேண்டுமா?
ஆம். நமது ஸம்ஸ்க்ருதம் என்ற இந்த பாடத்திட்டமானது இணையவழியிலே நேறிடையாகக்(live/interactive) கற்பிக்கப்படுவதால் வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் இணையதளம் மூலம் இணைந்திருக்க வேண்டும்.
நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்தில் மொத்தம் எத்தனை வகுப்புகள் ? எப்பொழுது பாடத்திட்டம் நிறைவடையும்?
வாரம் தோரும் 2 வகுப்புகள் வீதம் மொத்தம் 35 வகுப்புகள். சுமார் ஐந்து மாதங்களில் முடிவடையும். இடையே பண்டிகை போன்ற காரணங்களால் வகுப்புகள் தடைபெறும் பட்சத்தில் பாடத்திட்டத்தின் நிறைவு சற்றே தாமதமுமடையலாம்.
ஒரு வேளை இடையே ஒருசில வகுப்புகளில் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வது ?
இடையே ஒருசில வகுப்புகளில் பங்கு கொள்ள முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நடத்தப்படும் பாடங்களின் ஒளிப்பதிவுகளை நாங்கள் இந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் (upload) செய்யுவோம். அந்த ஒளிப்பதிவுகளைக்கொண்டு விட்டுப்போன வகுப்புகளின் விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒறுகால் தொடற்சியாக மூன்று பாடங்களுக்கு மேல் நேரிடையாக பங்குகொள்ள இயலவில்லை என்றால் தாங்கள் பாடத்திட்டத்திலிருந்து முன்னறிவிப்பில்லாமல் நீக்கப்படுவீர்கள். ஒளிப்பதிவுகள் பாடத்திட்ட ஆரம்பத்திலிருந்து ஒரு வருட காலம் இணையதளத்தில் இருக்கும்.
நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்திற்குத் தேவையான புத்தகங்கள் யாவை? அவைகளை எவ்வாறு பெறவேண்டும்?
நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்திற்குத் தேவையான புத்தகங்கள் ஶப்தமஞ்ஜரீ மற்றும் பாலாதர்ஶ: இவ்விரண்டும் ஸம்ஸ்க்ருத புத்தகங்கள் கிடைக்கும் கடைகளில் (கிரி ட்ரேடிங்க் போன்ற கடைகளில்) கிடைக்கும். இவைகளை மாணவர்களே பெற்றுக்கொள்ள வேண்டும். கல்லூரி வழியாக இப்புத்தகங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது. இணையதளம் மூலம் பெற, கீழ்கண்ட முகவரிகளைப் பயன்படுத்தலாம்:
அல்லது இவ்விரண்டு புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய இந்த வளைதளத்தின் முகப்பிலுள்ள LIVE BOOKS என்ற Menu-வைப் பயன்படுத்தலாம்.
இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?
Google Chrome அல்லது Micrsoft Edge போன்ற browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.